Home இலங்கைபடையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும்…

படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும்…

by admin

ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள், கூட்டமைப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்ரமசிங்க, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு குறித்தே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் துரித கதியில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இந்த கலந்துரையாடலில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More