கடந்த 2002-ம் ஆண்டு டெல்லி தொழிலதிபர் அசோக் குப்தாவை கடத்தி, 5 கோடி ரூபா கேட்டு மிரட்டியதாக மும்பை தாதா அபு சலீம் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அபு சலீம் குற்றவாளி என நீதிபதி கடந்த மே 26-ம் திகதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தீர்ப்புக்கான இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்றையதினம் நீதிமன்றம் தீhப்பளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரையும் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அபு சலீம், தற்போது மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது