ஈராககின் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார். பாக்தாதில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பகுதியில் நேற்றையதினம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை மீட்டுள்ளனர். இதேவேளை வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி எனவும் இந்நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அரசு முடிவு செய்திருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது