Home இலங்கைஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…

ஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குணரட்ணம் விஜிதா (வயது -36) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

“கணவனைப் பிரிந்து வாழும் இந்தப் பெண், கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக உள்ளார். வேலை செய்யும் வீட்டிலேயே அவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More