சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை புலனாய்வுப்பிரிவு இன்று விசாரணை செய்யவுள்ளது. அதன்படி ஜயந்த விக்ரமரத்னவை இன்று முற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவிடம், லசந்த கொலையின் பின்னர் சாட்சிகள் மாற்றப்பட்டமை, லசந்தவின் குறிப்புப் புத்தகம் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.