Home சினிமாவிஜயின் சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கிறாரா வரலட்சுமி?

விஜயின் சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கிறாரா வரலட்சுமி?

by admin



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்’ படத்தில், வரலட்சுமி வில்லிக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. `சர்கார்’ படத்தின் முதல் சுவரொட்டி அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை பற்றி புதுப்புது தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.

இதில் தற்போது, விஜய் மற்றும் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் எதிர்பார்ப்புக்கள் பரவியுள்ளன. படத்தில் வரலட்சுமி முதலமைச்சரின் மகளாக நடிப்பதாகவும், வெளிநாட்டில் படிக்கும் வரலட்சுமி, விஜய்யின் தோழியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை மற்றொரு தகவலின்படி படத்தில் வரலட்சுமி எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். இந்த நிலையில் வரலட்சுமி இந்தப் படத்தில் முதலமைச்சரின் மகளாகவும் வில்லியாகவும் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More