குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ” புலிகள் மீள உருவாக வேண்டும் ” என உரையாற்றி இருந்தார். அவரது அந்த கருத்தை கேட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச ஊழியர்கள் பலரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரித்து இருந்தனர்.
அந்நிலையில் தற்போது விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் , அன்றைய தினம் நிகழ்வில் கலந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
“புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” காணொளி இணைப்பு…