201
காலா திரைப்படத்தில் புயல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பொலிவுட் நடிகை அஞ்சலி பாட்டேல் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். காலா திரைப்படத்தில் புயல் சாருமதி என்ற போராளி வேடத்தில் அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்? என ஒரு பேட்டியில் கேட்டபோது விஜய் சேதுபதியின் பெயரை அஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் பற்றி அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய அறிந்திருப்பதாகவும் அவருடன் நடிக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
மராத்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கும் அஞ்சலி பட்லே் இரண்டு தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலி பாட்டீல் அடுத்ததாக ஆவணப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Spread the love