198
சினிமாவில் நடிகர் நாசரும் கமல்ஹாசனும் மிக நெருக்கமான நண்பர்கள். இருவரும் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் வாரிசுகள் புதிய திரைப்படம் ஒன்றில் ஜோடி சேர்கின்றனர்.
விவேகம் படத்திற்கு பிறகு அக்ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகனாக நடிகர் நாசர் மகன் அபி மெக்தி நடிக்கவுள்ளார். கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
ராஜேஷ் செல்வா அடுத்து இயக்கும் திரைப்படத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிக்கின்றனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love