Home இலங்கைபிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படாது

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படாது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படாது என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலங்சூரிய தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுயாதீனமான மற்றும் முழு  நேர ஊடகவியலாளர்களே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர் இதனால் எதிர்வரும் ஆண்டுக்காக ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படும் போது பிராந்திய செய்தியாளர்கள் என்ற பிரிவின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் இந்தக் குழுவினை அமைப்பது குறித்து கருத்துக்கள் தற்போது கோரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More