Home சினிமாபிக்பாசில் அரசியல் நையாண்டி பேசிய கமல்ஹாசன்

பிக்பாசில் அரசியல் நையாண்டி பேசிய கமல்ஹாசன்

by admin


தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகரும் மக்கள் மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசியுள்ளார்.  அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும். என்று கூறினார்.

‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என நிகழ்வை ஆரம்பித்துக் கொண்டு அரசியல் நையாண்டியுடன் பேசத் தொடங்கினார் கமல்.முன்னாள் தலைவர்கள் இணைந்து ‘தகுதியற்ற தலைவர்’ என்னும் பரிசை ரம்யாவிற்கு அளித்தார்கள். “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என அரசியல் நிகழ்ச்சியில் கலந்து தூவினார் கமல்ஹாசன்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More