Home பிரதான செய்திகள்வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் – நொர்தேன் எலைட் எவ்.சி – ரில்கோ அணிகள் வெற்றி…

வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் – நொர்தேன் எலைட் எவ்.சி – ரில்கோ அணிகள் வெற்றி…

by admin


வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று(20) இடம்பெற்ற ஆட்டத்தில் நொர்தேன் எலைட் எவ்.சி. அணி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் இடம்பெற்றது.

நொர்தேன் எலைட் எவ்.சி. அணியை எதிர்த்து மாதோட்டம் எவ்.சி. அணி மோதியது. 1:0 என்ற கோல் கணக்கில் நொர்தேண் எலைட் எவ்.சி. அணி வெற்றிபெற்றது.

ரில்கோ வெற்றி

வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூரெர்ஸ் அணி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூரெர்ஸ் அணியை எதிர்த்து மன்னார் எவ்.சி. அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில்  ரில்கோ வெற்றிபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More