ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் தலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான்களை நேரடி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷரப் கனி அழைப்பு விடுத்திருந்த போதும் தலிபான்கள் அமெரிக்காவுடன் மட்டுமே நேரடி பேச்சு நடத்துவதில் ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் கட்டார், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடங்களில் தலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை தங்கள் நிலைப்பாடு தெளிவானது எனவும் ஏற்கனவே கூறியதைப்போன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை திரும்பப்பெறப்பட வேண்டும் எனவும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.