Home இலங்கைமன்னாரில் மின்சார சபைக்கு எதிராக போராட்டம் ( படங்கள் )

மன்னாரில் மின்சார சபைக்கு எதிராக போராட்டம் ( படங்கள் )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் துண்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னாரில் இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. -மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த பேரணி இடம் பெற்றது. மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக சீரான மின்சாரம் வழங்கப்படாத நிலையில் அடிக்கடி மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது. தினமும் சில மணி நேரம் அல்லது நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையாகிய நிலையில் காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடந்தது.குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பேரணியில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள வடமாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி பொது அமைப்புக்களின் பிரதி ;,வர்த்தகர்கள்,முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியின் இறுதியில் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் பிரஜைகள் குழுவினரினால் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மின் பொறியலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More