Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

by admin

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டத்திற்கு எதிரான பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் அங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்ற நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்றும் இன்றும்   கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அமர்நாத் யாத்ரீகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது 35ஏ சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்குவது தொடர்பாக உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More