Home இந்தியாஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

by admin

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமாகியுள்ளார். கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் காலமாகியுள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.  93 வயதான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்றையதினம் அறிக்கை வெளியிட்டிருந்தநிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதேவேளை வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More