எமது மாநிலம் வெள்ள பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வரும் என்று கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் இந்த மழை காரணமாக மநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கின்றது. மழை மற்றும் மண்சரிவு போன்ற சம்பவங்களால்உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது.
வரலாறு காணாத – கடந்த நூறாண்டுகளில் ஏற்படாத இந்த இயற்கை பேரழிவு காரணமாக நேற்று மாத்திரம் 33 பேர் பலியாகியுள்ள உள்ளனர். இதுவரை 357 பேரை கேரள மாநிலம் பறிகொடுத்துள்ளது. இப் பேரழிவில் மீள கேரள மாநிலம் இந்திய மாநிலங்களிடம் உதவிகளை கோரி வருகின்றது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளில் இருந்து எமது மாநிலம் விரைவில் மீண்டுவிடும் அம் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இப் பேரழிவு காணமாக 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்நுள்ளதாகவும் இன்று மாத்திரம் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார். அத்துடன் இன்று 22,034 பேர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெள்ளம் வற்றிய பகுதிகளில் மின்சாரத்தை விநியோகிப்பது பற்றிய ஆலோசனை இடம்பெற்று வருவதாகவும் வெள்ளம் வற்றியவுடன் முழுமையான புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.