முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய சகோதரரான காலஞ்சென்ற சந்ரா ராஜபக்ஸவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய, மெதமுலன இல்லத்திற்கு இன்று (25.08.18) காலை பயணம் செய்த ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ, உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, மேல் மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.