207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் வட்டக்கண்டல் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழா நேற்று (25) சனிக்கிழமை இடம் பெற்றது. இதன் போது தேர் உற்சவம் சிறப்பாக இடம் பெற்றதோடு, பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் பிள்ளையார் தேர் ஏறி வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குறித்த தேர் உற்சவத்தின் போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இன்று 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமை தீர்த்த உற்சவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love