Home இந்தியாஇ சிகரெட் விற்பனைக்கு இந்தியாவில் தடை

இ சிகரெட் விற்பனைக்கு இந்தியாவில் தடை

by admin


இந்தியாவில் இ சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிகரெட்டை போன்றே இ சிகரெட்டும் புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை அமைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்

இந்த நிலையில், இந்தியாவில் இ சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இ சிகரெட் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More