169
தமிழக முதலமைச்சர் கௌரவ செல்வி ஜெயலலிதா அவர்களின் உடல்நிலைபற்றிய முரணான செய்திகள் எமக்கு கவலையளிக்கின்றன. எனினும் அவர் விரைவில் சுகமடைய வேண்டும் என்ற வடமாகாண தமிழ் உள்ளங்களின் பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இலங்கை வடமாகாண தமிழ் மக்களின் மனம்கவர்ந்த தலைவியார் செல்வி ஜெயலலிதா அவர்கள் எமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவர்.
அவர் சொல்லவேண்டிதை பயப்படாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறும் இயல்புடையவர். அவர் சுகமடைந்து அரசியல் வானில் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றோம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண முதலமைச்சர்
இலங்கை
Spread the love