முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசிய பொரிஸ் ஜோன்சன், தனது கருத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சக உறுப்பினர்களால் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அண்மையல் வெளியுறவுத் தறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் பதவிவிலகியிருந்தார்.
இந்த நிலையில், டென்மார்க்கில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பாக கடந்த மாதம் நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி அளித்த அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
மேலும், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் போது ஒருவர் மட்டும் முகத்தை மறைத்துக்கொண்டு மற்றொறுவருடன் பேசுவது தவறு, பாடசாலைகள், கல்லூரிகளில் உள்ள பெண்கள் புர்கா அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் வங்கிக்கொள்ளையர்கள் போல இருப்பதாகவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் பொரிஸ் ஜோன்சன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவரது கூற்று அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியதால், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்ததுடன் பொரிஸ் ஜோன்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பொரிஸ் ஜோன்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி அளித்த பொரிஸ் ஜோன்சன் , புர்கா குறித்த தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளர்.
குறிப்பாக பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறக்கூடாது, அவ்வாறு வெளியேறினால் அது நமக்கே பாதகமாக முடியும் என்ற தனது வலுவான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதற்கு எதிர்வினையாக புர்கா விவகாரத்தில் தான் தெரிவித்த கருத்துக்களை தவறாக சித்தரித்து மக்களிடையே கோபத்தை அதிகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் எனத் அவர் தெரிவித்துள்ளார்.