இலங்கையின் 9 மாகாண சபைகளில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்தரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபையிலுள்ள 38 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்களுக்கு மாத்திரம் இவ்வாறு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் பிரதி செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஏனைய நான்கு உறுப்பினர்களும் குறித்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்காக கடந்தாண்டு நாற்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது