Home இந்தியாஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

ஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

by admin

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று இந்தியா, உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளது.  193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை பேரவைக்கு உறுப்பினராக தெரிவாக முடியும் என்கின்ற வகையில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கென ஐ.நா சபையில் மனித உரிமை பேரவையில் ஐந்து இடங்கள் காணப்படுகின்ற நிலையில நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று அதிக ஆதரவை பெற்றுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு பேரவையில்; உறுப்பினராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவுடன் சேர்த்து பசுபிக் பிராந்தியத்திற்கென பக்ரைன், பங்களாதேஸ்;, பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More