முள்ளி வாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண் போராளிகள், ஆதரவாளர்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாக உருவெடுத்துள்ள நிலையில் #MeToo ருவீட்டர் பகிர்விலும் படையினர் மீதான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டள்ளது.
உலகம் முழுவதும் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் #MeToo விவகாரம் இந்திய அளவிலும் பல பிரபலங்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை இதுவரை செலுத்தாத நிலையில் அம்சவல்லி என்ற ருவீட்டர் பதிவாளர் #MeTooவில் ஒளிப்பட ஆதாரத்துடன் தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, இறுதிக் கட்ட யுத்தகாலத்தில் விடுதலை புலிகளால், வலுக்கட்டாய ஆட்சேர்ப்பின் ஊடாக இணைக்கபட்டடிருந்த ஏ உஜாலினி என்ற பாடசாலை மாணவி, யுத்தம் நிறைவடைந்த இறுதித் தருணங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
இவ்வாறு சரணடைந்த இந்த மாணவி அப்போது பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபயவின் உத்தரவின் பேரில் 58 ஆவது படைப்பிரிவினரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தனது ருவிட்டரில் அம்சவள்ளி என்ற பெண் #MeToo பகிர்வில் தெரிவித்துள்ளார்.