Home இலங்கையாழ்.திருநெல்வேலியில், தனியாக வசித்து வந்த, யேசுதாசன் நிமல்ராஜ் சடலமாக மீட்பு…

யாழ்.திருநெல்வேலியில், தனியாக வசித்து வந்த, யேசுதாசன் நிமல்ராஜ் சடலமாக மீட்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த 48 வயதுடைய யேசுதாசன் நிமல்ராஜ் எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்த தகவலின் பிரகாரம் வீட்டிற்குள் சென்ற காவற்துறையினர் வீட்டினை திறந்து பார்த்த போது , சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More