ஈராக்கில் சிரேஸ்ட பெண் ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
ஈராக்கின் மூத்த சிரேஸ்ட ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான அஃப்ரா அல் குவைசி பாக்தாத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து திங்கட்கிழமை இரவு துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என ஈராக் உள்துறை அமைச்சு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஈராக்கில் நிலவிய தீவிரவாத தாக்குதலையும், ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஈராக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment