Home இலங்கைமுறிகண்டியில் வவுனியாவைச் சோ்ந்தவாின் சடலம் மீட்பு

முறிகண்டியில் வவுனியாவைச் சோ்ந்தவாின் சடலம் மீட்பு

by admin

 

முல்லைத்தீவு – மாங்குளம்   காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியில்  சடலம்   ஒன்று  காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் மாங்குளம்  காவல்துறையினருக்கு  வழங்கப்பட்ட தகவலையடுத்து அவா்கள்    விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலம் வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.  சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டமுல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான்  சடலத்தை  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு  உத்தரவிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More