Home இலங்கைகல்முனை பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை –   காவல்துறையினா்  குவிப்பு

கல்முனை பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை –   காவல்துறையினா்  குவிப்பு

by admin

 

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  காவல்துறைப்  பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு  பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினா்  குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த  சம்பவம் இன்று (14) காலை  எட்டு முப்பது மணிக்கு   இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் காணாமல்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி  ஆகியோருக்கு காவல்துறையினரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
   கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன்  ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்  பொதுமக்களுடன் இணைந்து   முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற   காவல்துறையினா் கல்முனை நீதிவான்  நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து   குறித்த நிகழ்வினை  நிறுத்துமாறு கூறி   தடை உத்தரவை வழங்கியதுடன் எச்சரிக்கை விடுத்து  அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனா்.
 கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில்   மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More