குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் டைசன் கேயின் மகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கென்டக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 வயதான Trinity Gay என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உணவு விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் போது சிறுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.
டைசன் கே அமெரிக்க 100 மீற்றர் ஒட்டப் போட்டி சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் மரணம் தம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்தாக கே தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment