குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நான்கு பேரைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு வர உள்ளனர். தேசிய நல்லிணக்க முனைப்புக்கள், பெண்களுக்கான வலுவூட்டல் போன்ற விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் இந்தப் பிரதிநிதிகள் கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது இந்த வருகையின் போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது. அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரசல்ஸிற்கு விஜயம் செய்து, வரிச் சலுகை பெற்றுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment