24
இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிழந்துள்ளதுடன் 10இற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் ஷாதரா பகுதியின் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிடித்த தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து பகுதியில் ரிக்ஷா ஒன்று மின்னேற்றம் செய்யப்பட்டு வந்ததால், அதன் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love