குளோபல் தமிழ் செய்தியாளர்
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் கைரேகை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற பேரவை உறுப்பினர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தருமபுரியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இந்தப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது முன்னாள் முதல்வர்கள் பலர் ஆட்சியை விட்டு சென்றுள்ளதாகவும் தற்போது அ.தி.மு.க அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது என்றும் கூறிய அவர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் என்று தெரிவித்தார்.
எனினுத் முதல்வர் நலமுடன் உள்ளார், அவர் தானே எழுந்து உணவு உண்ணுகிறார், பேசுகிறார் என்றெல்லாம் அ.தி.மு.கவினர் சொல்கின்றனர் என்று கூறிய அவர் அப்படியென்றால் வேட்பாளருக்கு சின்னம் வழங்க ஏன் ரேகை உருட்டினார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அவருக்கே தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது என்றும் ஜெயலலிதா எழுந்து வந்தால், யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும் என்றும் கூறிய அவர் இன்னும் ஆறு மாதத்தில் மக்களுக்காக பணியாற்றும் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் என்றும் மேலும் அங்கு தெரிவித்தார்.
Spread the love
Add Comment