இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு 15 கோடி ரூபா

jeya1
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக நினைவிடம் அமைப்பதற்கு 15 கோடி ரூபாவை  தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை – மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான  கேள்விப்பதிரம் கோருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவில் முறைப்படி மேற்கொள்ளப்படும் எனவும் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள், மிகக் குறுகிய கால அளவில் துரிதமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்குள் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  எனினும் இது தொடர்பாக அரசிடம் இருந்து இதுவரை எவ்வித உத்தரவும் கிடைக்கவில்லை என   பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.