இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சித்து வருகின்றனர். காணாமல் போன தங்களது உறவுகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கான ஓர் கருவியாக தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என மட்டக்களப்பு பெண்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.

பல்வேறு ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதுடன், பல்வேறு மகஜர்களும் காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த தகவல் அறிந்து கொள்ளும் சட்டம்  கடந்த மாதம் 3ம் திகதி இந்த இந்த சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

சட்டம் அமுல்படுத்தப்பட்ட அதே தினத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த 15 பெண்கள், மாவட்டச் செயலகம், மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில் காணாமல் போன தங்களது சொந்தங்கள் பற்றிய விபரங்களைத் தருமாறு கோரியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply