இந்தோனேசிய ஜகார்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ளார். இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பேண்தகு மற்றும் சமாந்தரமான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக அரச தலைவர்கள் மாநாடு இடம்பெறவுள்ளது.
‘இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான, சுபீட்சமான பிராந்தியமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 07 ஆம் திகதி ஜகார்த்தா நகரில் ஆரம்பமாவுள்ளதுடன், ஜனாதிபதியும் அதில் உரையாற்றவுள்ளார்.
Spread the love
Add Comment