விளையாட்டு

83வயதில் தடகள போட்டியில் 3 தங்கங்கள் வென்ற தாத்தா


அண்மையில் இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியின் ஆண்கள் பிரிவில் 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசேஷன் என்பவர்  3 தங்கம் வென்றுள்ளார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை தங்கம் பெற்றுள்ளார்.

இவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய மூத்தோர் தடகள போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.