Home இந்தியாஅதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிச்சல் ஸ்டார்க் 

அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிச்சல் ஸ்டார்க் 

by admin

 

ஐபிஎல் ஏலம் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில்  இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் மிச்சல் ஸ்டார்க்  அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக பதிவாகியுள்ளார்.   அவரை  கொல்கத்தா   நைட் ரைடர்ஸ்  அணி 24.75 கோடி இந்திய ரூபாவிற்கு   ஏலத்தில் எடுத்துள்ளது.

மிச்சல் ஸ்டார்க்கை அடுத்து,  அவுஸ்திரேலிய அணியின் தலைவரான  பாட் கம்மின்ஸை    20.5 கோடி இந்திய ரூபாவிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  வாங்கியுள்ளது.

இலங்கை வீரா் தில்ஷான் மதுஷங்கவை  மும்பை இந்தியன்ஸ் அணி 4.60 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலத்தில்   எடுத்துள்ள அதேவேளை இலங்கையின் வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியுள்ளது.

ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளதுடன் மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை  7.4 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வாங்கியுள்ளது.

மேலும் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக்கை 4 கோடி இந்திய ரூபாவிற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியு்ம் அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடிக்கு  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More