மருத்துவ நியதிச்சட்டத்திற்க அமைவாக மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச மருத்துவர்கள் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அரச மருத்துவர்கள் பேரவை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவினை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்குமாறும் அங்கு கல்வியை நிறைவு செய்து பட்டம் பெற்றவர்களை வைத்தியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comment