கர்நாடகாவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது லொரி ஒன்று மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லொரியின் டயர் திடீரென வெடித்ததனால் நிலைகுலைந்த லொறி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற இரண்டு முச்சக்கரவண்டிகள் மீதும் வான் ஒன்றுடனும் மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Add Comment