Home இந்தியாபயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை

பயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை

by admin


வெளி நாடுகளில் இருந்து அதி பயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த கப்பல் இந்தியாவின்  எந்த பகுதியில்  ஊடுருவி இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் உறுதியாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் கூட இந்த ஆயுத கப்பல் ஊடுருவி இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த கப்பலில் அதிபயங்கர ஆயுதங்களான நவீன துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சுங்க துறையினரும், காவல்துறையினரும் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் உளவு பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக வரும் கொள்கலன்களை சுங்கத் துறையினர் கடுமையாகக சோதனை நடத்தி வருகிறனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More