உச்ச நீதிமன்றின் தீர்ப்பைக்கூட பாராளுமன்றம் உதாசீனம் செய்ய முடியும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தை நேற்றைய தினம் முன்வைத்துள்ள தினேஸ் குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதனை கடந்த கால சபாநாயகர்கள் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment