மருதமுனை கிரிக்கெட் சங்கம் மற்றும் மருதமுனை சப்னாஸ் ஆடையகத்தின் அனுசரணையுடன் மருதமுனை மிமா விளையாட்டு கழத்தினால் மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மருதமுனை எலைட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட்மைண்ட் விளையாட்டு கழகத்தை எதிர்த்து மருதமுனை எலைட் விளையாட்டு கழகம் மோதியது.
முதலில் துடுப்படுத்தாடிய எலைட் 10 ஓவர் நிறைவில் 111 ஓட்டங்களை பெற்றது. எலைட் சார்பாக சிபார் அரைசதம் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கோல்ட்மைண்ட் அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களையே பெற்றனர். அந்த வகையில் எலைட் அணியினர் 26 ஒட்டங்களினால் மிமா 2017 கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்
Spread the love
Add Comment