ஸ்டொக்கொமில் அண்மையில் ட்ரக் வண்டித் தாக்குதல் நடத்திய நபர் ஒர் ஐ.எஸ் தீவிரவாதி என உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இது குறித்து மேற்குலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Abdulaziz Kamilov கைது செய்யப்பட்ட றக்மாற் அகிலோ ( Rakhmat Akilo ) 2014ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டதாகவும் பின்னர் சுவீடனில் குடியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு சென்று தாக்குதல்களை நடத்துமாறு தமது நண்பர்களை, றக்மாற் அகிலோ கோரியுள்ளதாகவும் உஸ்பெகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment