அரசாங்கம் மக்கள் போhட்டங்களை ஒடுக்க முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். குப்பை கொட்டுதல் தொடர்பில் மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு பொலிஸ் பலத்தைப் பிரயோகிப்பது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் மீதொட்டமுல்ல அனர்த்தத்தை தொடர்ந்து இவ்வாறான ஓர் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment