கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.
கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கடந்த 22ம் திகதி முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான தகவல்களை மூடி மறைத்தார் என அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தி அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Add Comment