இலங்கை

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது – காவல்துறை மா அதிபர்


போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிலியந்தலை பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை தடுக்கச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயமடைந்திருந்ததுடன் மேலும் சில பொதுமக்களும் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தாக்குதல்களின் ஊடாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடியாது என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply