ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்தால் அது ஆபத்தாக அமையும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணுவாயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட முடியாது என ஜெருசலேமில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேரடியாக இரு நாடுகளும் பேசி தீர்வு எட்ட முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love
Add Comment