இயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மண்சரிவு குறித்து வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளை மக்கள் கவனத்திற் கொள்ளத் தவறியதாகவும் இதனால்தான் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாகவும் சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது அவர்கள் வெளியேறியிருந்தால் அனர்த்தங்களை வரையறுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Add Comment