இந்தியா

லாலு பிரசாத் யாதவ் – ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள் முதலமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும்  ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகியுள்ளனர்.

தியோகார் மாவட்ட கருவூலம், டொரண்டா ராஞ்சி கருவூலம் ஆகியவற்றில் இருந்து முறைகேடாக பணம் பெற்றமை தொடர்பான 2 வழக்குகளில் லாலு பிரசாத் முன்னிலையானார்.
அதேவேளை தியோகார் மாவட்ட கருவூல முறைகேடு வழக்கு தொடர்பில் மிஸ்ரா முன்னிலையானார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த லாலு பிரசாத்  நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது எனவும்  தன்னை அழைக்கும்போதெல்லாம் முன்னிலையாவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply